சற்று முன்
Home / செய்திகள் / 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

மேலும் 16000 பட்டதாரிகளை அரச சேவை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் அடிப்படையில் அரச சேவையில் ஒரு வருட பயிற்சிக்காக உள்ளீர்க்கப்பட்டு அதன் பின்னர் பொருத்தமான அரச திணைக்களங்களில் நிரந்தர தொழில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த 16000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக அண்மையில் பயிற்சிக்காக உள்ளீர்க்கப்பட்ட 3725 பட்டதாரிகளை விரைவில் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com