சற்று முன்
Home / செய்திகள் / 16 சமூக வலைத்தளங்கள் 10 இணையங்களுக்கு எதிராக சிறிதரன் எம்.பி முறைப்பாடு

16 சமூக வலைத்தளங்கள் 10 இணையங்களுக்கு எதிராக சிறிதரன் எம்.பி முறைப்பாடு

தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும் நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மோசமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில், நேற்று (24) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால், முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக, பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனது, நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத் தலைப்பு என்பவற்றை தொழில்நுட்ப ரீதியாக மோசடியான முறையில் பயன்படுத்தி, அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதைப் போல, தமது நோக்கத்துக்கேற்ப கடிதமொன்றைத் தயாரித்து பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில், சிலர் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.

குறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை போன்றும் அமைந்திருப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறிதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.

இதனைப் பாரதூரமான குற்றமாக கருதிய சபாநாயகர், இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுமாறு கூறியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத்தலைப்பு என்பவற்றை மோசடியான முறையில் கையாண்டு, தனது பேஸ்புக் வழியாகச் செய்தியாகப் பரப்பிய 16இற்கும் மேற்பட்ட பேஸ்புக் சொந்தக்காரர்களும் 10 வரையான இணையத்தளங்களும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கட்சியின் கிளிநொச்சி வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதி அரியரட்னம் மீதும் முறைபாடு செய்திருக்கின்றார். மாகாண சபை உறுப்பினா் தனது முகநூலில் குறித்த கடிதத்தை பதிவேற்றியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com