சற்று முன்
Home / செய்திகள் / 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் மோடியிடம் சம்பந்தன், டக்ளஸ் கூட்டாகக் கோரிக்கை

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் மோடியிடம் சம்பந்தன், டக்ளஸ் கூட்டாகக் கோரிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, இரா.சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், 1987ஆம் ஆண்டின் இந்திய- சிறிலங்கா உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

தனிநாடு கோரிவந்த தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச சதிமுயற்சியுடன் தோற்கடித்தநிலையில் சமஸ்டிக் கோரிக்கைகளை தமிழ் அரசியல்தரப்புக்கள் வலியுறுத்திவந்தன. எனினும் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள் எனக்கூறி தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளி தாங்களை தமிழ்களிக் ஏக பிரதிநிதிகள் என இறுமாப்புச் செய்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மக்களின் ஆணைகளைப் புறந்தள்ளி தென்னிலங்கை அரசியல்தரப்புக்களுக்கு முண்டுகொடுக்கத் தொடங்கியது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பின் யாரை தமிழர் விராத அமைப்பு என தாங்களே மேடைகளில் முழங்கினார்களோ அதே ஈபிடிபியுடனும் ஏனைய தென்னிலங்கை சிங்கள அரசியல் தரப்புக்களுடனும் கைகோர்த்து பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஈபிடிபியின் நிலைப்பாடான 13 ஆவது திருத்தத்துக்குள் தன்னை உள்வாங்கிக்கொண்டுள்ளது.

இதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது ஈபிடிபிக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கூட்டாக 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com