சற்று முன்
Home / செய்திகள் / 10 இலட்சம் தபால்கள் தேக்கம் – பரீட்சை, தரம் 01 அனுமதி விண்ணப்பாதரிகள் ஏமாற்றம்

10 இலட்சம் தபால்கள் தேக்கம் – பரீட்சை, தரம் 01 அனுமதி விண்ணப்பாதரிகள் ஏமாற்றம்

இன்று இரண்டாவது நாளாகவும் தபால் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால்,பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் சுமார்  10 லட்சத்துக்கும் அதிகமான தபால்கள் தபாலகங்களில் தேக்கமடைந்துள்ளன.
நுவரெலியா,  கண்டி, காலி மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய தபால் நிலையங்களில் சொகுசு விடுதிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து நடத்தப்படும் இந்தப்  பணிப்புறக்கணிப்பால் தபால் சேவைகள் அனைத்தும் முற்றாக முடங்கியுள்ளன.
அதேவேளை முதலாம் வருடத்துக்கான பாடசாலை விண்ணப்பங்களை அனுப்பும் நடவடிக்கை மற்றும் பல்கலைக் கழக நுழைவுக்கான செயன்முறைகள் நடைபெற்று வரும் நிலையில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக  மாணவர்களும், பெற்றோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் தரத்துக்கான விண்ணப்பத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதுடன், தபாலில் அனுப்பாமல் நேரடியாகப் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பங்களைக்  கையளிக்க முடியும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com