சற்று முன்
Home / செய்திகள் / பதுளை நகரில் தமிழிற்கோர் விழா – மலைத்தென்றல் 2018

பதுளை நகரில் தமிழிற்கோர் விழா – மலைத்தென்றல் 2018

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர்களால் வருடந்தோறும் வெகுசிறப்பாக நடாத்தப்படும் “மலைத் தென்றல்” – தமிழ்ப் பாரம்பரிய கலை கலாச்சாரப்பெரு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் ( 04/11/2018) திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பதுளை ஊவா மாகாண பொது நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர்கள் படைத்தளிக்கும் கலை நிகழ்ச்சிகளுடன், சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பாரம்பரிய கூத்து நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அத்துடன் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட மொழியியல் போட்டி “கலைத்திரள்”, மற்றும் புகைப்படப் போட்டி “கண் வழியே..” போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு, மலைத்தென்றல் நூல் வெளியீடு மற்றும் மலைத்தென்றல் பாடல் வெளியீடு ஆகியனவும் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது வருடாந்தம் ஊவா வெல்லஸ்ஸ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களால் சிறப்பான முறையில் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்

“மலைத்தென்றல்” நிகழ்விற்கு அனைவரினையும் வரவேற்கின்றனர்; ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர்கள் !!

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com