சற்று முன்
Home / சினிமா / ‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது !

‘நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வலிமை முன்னோட்டம் வெளியானது !





நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த முன்னோட்டம் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 6 மணி 30 நிமிடங்களுக்கு வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் தற்போது அதை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com