சற்று முன்
Home / செய்திகள் / “தமிழ் துணை இராணுவம்” – விரைந்து அமைக்க முடிவு – இரகசியப் பேச்சுக்கள் தீவிரம்

“தமிழ் துணை இராணுவம்” – விரைந்து அமைக்க முடிவு – இரகசியப் பேச்சுக்கள் தீவிரம்

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ் துணை இராணுவ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்ட தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை அவசரஅவசரமாக ஆரம்பித்து இருக்கின்றன என்று நம்பிக்கையாக அறியவருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மாற்று தமிழ் போராளிகள் குழுக்களையும் ராசிக் குழு, கருணா குழு, பிள்ளையான் குழு,போன்றவற்றையும் இராணுவத்துணைப் படையாக இலங்கை அரசுத் தரப்பு பயன்படுத்திவந்தது என்பது பரகசியமான செய்தியாகும்.

இத் துணை இராணுவ குழுக்கள் செயற்படுவதற்கு தாராளமாக மாத வேதனமும் வழங்கப்பட்டு வந்தது.

எனினும் 2009 இல் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து முன்னய அரசு அனைத்துத் துணை இராணுவ குழுக்களையும் கலைத்தது. அவற்றிற்கு மூடுவிழா நடத்தி துணை ராணுவ படை என்ற அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை அரசு தலைமையும் பாதுகாப்பு உயர் பீடமும் இந்த பயங்கரவாதத்தை முளையோடு கிள்ளி, அடக்குவதற்கு துணை இராணுவக் குழுக்களை மீளவும் விரைந்து அமைப்பது அவசியம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன என மிக மிக நம்பகமாக அறியமுடிகின்றது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சமயம் முஸ்லிம்களுடன் அதிகளவில் முரண்பட்டு புலிகளுக்கு எதிராகவும், அதேபோன்று தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை சீற்றம் கொள்ளவைத்தவரும் பின்னாள்களில் புலிகள் இயக்கத்தை பலவீனப் படுத்துவதில் அரசு தரப்புக்கு அதிகம் பங்களித்த வரும், இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருபவருமான ஒரு முக்கிய பிரமுகரை முஸ்லிம் தீவிரவாதத்திற்கு அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படக் கூடிய தமிழ் துணை இராணுவ குழுவுக்கு தலைமை தாங்க பொருத்தமானவர் என்று பாதுகாப்பு தரப்புக்கள் கருதுகின்றனர் என அறிய வந்தது.

இந்த காரணத்தால் பொலனறுவைப் பகுதியில் உள்ள முக்கிய படைத்தளம் ஒன்றுக்கு கடந்த மே தினத்தன்று அவரை அழைத்து இரகசியமாகப் பேச்சுக்களில் ஈடுபட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு உயர் மட்டங்கள் மீண்டும் விரைந்து தமிழ் துணை இராணுவ குழுவை உருவாக்கிச் செயற்படுத்துவதற்கான பச்சைக் கொடியை அவருக்கு காட்டி இருப்பதாகவும் அவர் தனது பூர்வாங்க வேலையை ஆரம்பித்து விட்டார் எனவும் அறிய வந்தது.

இஸ்லாமிய தீவிரவாதம் கிழக்கில் அதிகம் வேர் கொண்டு இருப்பதாகக் கருதும் பாதுகாப்பு வட்டாரங்கள் கிழக்குக்கு ஊடுருவி அதனை அடக்க இந்த முன்னாள் புலி போராளியின் நேரடி பங்களிப்பு வருவது தவிர்க்க முடியாது என்று கருதும் அதே நேரம் இராணுவ செயற்பாடு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செயலிழந்து செல்லாக்காசாகி இருக்கும் அவரும் இது கொழும்புக்குத் தனது உயர் விசுவாசத்தை காட்டவும் மீண்டும் ஒரு வலுவான சக்தியாக எழுச்சி பெறவும் அருமையான வாய்ப்பு எனக் கருதுகிறார் என்றும் தெரிகின்றது.

வடக்கிலும் கூட முன்னாள் போராளிகள் இயக்கங்களில் செயற்பட்டோரை ஒன்றிணைத்து துணை இராணுவக் குழுக்களை உருவாக்கப்பட கூடும் எனக் கருதப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com