சற்று முன்
Home / செய்திகள் / “வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது” – சென்ரிமென்ரை உடைத்தது திமுக கூட்டணி

“வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது” – சென்ரிமென்ரை உடைத்தது திமுக கூட்டணி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு.

பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்காற்றினார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் அந்த அணி தேர்தலைச் சந்தித்தது. அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. அப்போதும் அந்தத் தோல்விக்கு வைகோ சென்டிமென்ட்தான் காரணம் என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றது. சிங்கம் களம் இறங்கிடிச்சே...’ என்று சமூகவலைதளங்களில் மீம்ஸ் தட்டினார்கள் நெட்டிசன்கள்.ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்’ என்று வைகோ முழங்கினார். பலரும் அதை, சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களே வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றியின் மூலம் வைகோவுக்கு எதிரான அந்த சென்டிமென்ட் பிரசாரம் தவிடுபொடியாகிவிட்டது.

“தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதைத் தமிழக மக்கள் உறுதிசெய்திருக்கிறார்கள்” என்று உற்சாகத்துடன் கூறியிருக்கிறார் வைகோ.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com