சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என தெரிவித்து நோர்வூட் நகரில் ஆர்ப்பாட்டம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என தெரிவித்து நோர்வூட் நகரில் ஆர்ப்பாட்டம்.

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து சுமார் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதனால் சுமார் 81 குடும்பங்களைச் சேரந்த சுமார் 360 பேர் வரை நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடுமபங்களுக்கு அரசாங்கத்தினால் எந்த வித நிவாரணமும் இது வரை வழங்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே 11.12.2017 அன்று காலை பாதிக்கப்பட்ட மக்கள் நேரர்வூட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எங்கே, நோர்வூட் விளையாட்டு மைதானத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் எங்கே? பொகவந்தலாவையில் மாணிக்கல் அகழ்வை உடனே நிறுத்து, வரி பணம் பெறும் பிரதேச சபை ஏன் வந்து பார்க்கவில்லை, வெள்ளம் ஏற்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் நோர்வூட் பிரதேசம் பிரதேச சபையினால் சுத்தம் செய்யப்படவில்லை போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் சுமார் 300 மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினால் சுமார் 10,000 ரூபா கொடுப்பனவு தருவதாக அறிவித்திருந்த போதிலும் அந்த கொடுப்பனவு இது வரை வழங்கப்படவில்லை எனவும் தோட்ட மக்களுக்கு மாத்திரம் கடந்த தினங்களில் கூரைத்தகரங்கள் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் நிவாரணம் வழங்வென நோர்வூட் மைதானத்திற்கு கொண்டுப்பட்ட பொருட்கள் காணாமல் போய் உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் வந்து பார்க்கவில்லை எனவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் ..

கடந்த 30 ம் திகதி எங்கள் பகுதிக்கு வெள்ளம் ஏற்பட்டது இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பலரது உடைமைகள் சேதமாகின. எங்களுக்கு 5 பார்சல் சோற்றுப்பக்கட்டும் ஒரு சித்தாலேப சிறிய டப்பியும் தலையணையும் ஓர் போர்வையையும் தவிர வேறு எதனையும் கொடுக்கவில்லை.

நாட்டில் பாதிப்படைந்த அணைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் போது ஏன் எங்களுக்கும் இரண்டாம் நிலை அண்மையில் நோர்வூட் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதில் தோட்ட மக்களுக்கு மாத்திரம் தான் வழங்கப்பட்டன. அப்போ நாங்கள் மனிதர்கள் இல்லையா வெள்ளத்தால் பிரதேசம் முழுவதும் குப்பையால் நிறைந்து காணப்படுகின்றது.

இதுவரை அம்பகமுவ பிரதேசசபை பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் குப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதிக மாணவர்களுக்கு 10000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு முழுவதையும் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை. அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து ஒட்டு கேட்கிறார்களே தவிர இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது எந்த அரசியல் வாதியும் வருவதில்லை. இந்த பகுதியில் கால்வாய்கள் நிறைந்து தான் சிறிய மழைக்கும் வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் எவரும் அதை பற்றி கவலைப்படுவதில்லை. தயவு செய்து பொறுப்பு வாய்ந்தவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com