சற்று முன்
Home / செய்திகள் / வெளிநாட்டு துப்பாக்கி, ஹெரோயினுடன் மூவர் கைது !

வெளிநாட்டு துப்பாக்கி, ஹெரோயினுடன் மூவர் கைது !

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 5 மற்றும் குறிந்த சந்தேகநபர்கள் மூவரிடமிருந்தும் 18.86 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் அவர்களிடிமிருந்து ரூபா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் (ரூ. 125,000) பணம், (ஹெரோயின் விற்பனைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும்) சிறிய இலத்திரனியில் தராசு, 05 கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள், வத்தளை மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 30 – 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

களனி பிரிவிற்கான, சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, எண்டேரமுல்ல பிரதேசத்தில் வைத்து, குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இன்று (09) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com