சற்று முன்
Home / செய்திகள் / வெடிபொருட்களுடன் வடக்கிற்குள் 20 வானங்கள் நுளைந்துள்ளதாகத் தகவல்

வெடிபொருட்களுடன் வடக்கிற்குள் 20 வானங்கள் நுளைந்துள்ளதாகத் தகவல்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப் ரக வாகனங்கள், ஓட்டோ 1, டீமோ பட்டா லொறியொன்று, 2 கார்கள் இவ்வாறு வடக்குக்குள் நுழைந்துள்ளதாகவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றுத் தொடக்கம் குறித்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com