சற்று முன்
Home / செய்திகள் / வீதியைத் துண்டாடிய விவசாயிகள் ? விபரங்கள் தர மறுக்கும் பிரதேச சபை !!

வீதியைத் துண்டாடிய விவசாயிகள் ? விபரங்கள் தர மறுக்கும் பிரதேச சபை !!

கடந்த கார்த்திகை மாதம் நல்லூர் பிரதேச சபைக்குட்டபட்ட வட்டாரம் 01 காரைக்கால் வட்டாரப் பிரிவில் புதிதாக புனரமைக்கப்பட்டு தாரிடப்பட்ட வீதியின் செலவு விபரம் உள்ளிட்ட விபரங்களை நல்லூரி பிரதுச சபையிடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கோரியபோதிலும் அவற்றினை வழங்க நல்லூர் பிரதேச சபை மறுத்துவிட்டது.

குறித்த வீதி தொடர்பில் எமக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கு முற்பட்டபோதும் அவை தொடர்பான ஆவணங்களும் தம்மிடம் இல்லை என நல்லூர் பிரதேச சபை மறுத்துள்ளமை குறித்த வீதியில் மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்டபட்ட வட்டாரம் 01 காரைக்கால் வட்டராத்தில் புதிதாக தாரிடப்பட்ட வீதியானது சுமார் 25 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்பட்டு தாரிடப்படாது மண் வீதியாக இருந்துள்ளது. குறித்த வீதியானது நல்லூர் பிரதேச சபை மற்றும் வலி கிழக்குப் பிரதேச சபையின் எல்லைப்பகுதியாக காணப்படுகின்றது.

இவ்வீதி நல்லூரி பிரதேச சபையின் மற்றொரு வீதியுடன் இணைவதாக கூறப்படும் நிலையில் குறித்த வீதியினை சில விசாயிகள் துண்டாடி தமது விவசாய நிலங்களுடன் இணைத்துள்ள தாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் குறித்த வீதி இடை நடுவில் முடிவடைகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறித்த வீதியின் 170 மீற்றர் நீளப் பகுதி புதிதாக புனரமைக்கப்பட்டு தாரிடப்பட்டது. விவசாயிகள் சிலரால் துண்டாடப்பட்ட நிலையிலும் அதன் எஞ்சிய பகுதியாகக் காணப்படும் சுமார் 100 மீற்றர் பகுதி புனரமைக்கப்பட்டு தாரிடப்படாத நிலையில் குறித்த விபங்கள் அனைத்தையும் கோரி நல்லுர் பிரதேச சபைக்கு தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டது. அதனையடுத்து அவசர அவசரமாக எஞ்சிய பகுதியில் 50 மீற்றர் வீதி மீண்டும் தாரிடப்பட்டதோடு தகவல் அறியும் சட்டம் ஊடாக கோரப்பட்ட விபரங்களை முழுமையாக வழங்க சபை மறுத்துவிட்டது.

குறித்த வீதியின் செலவு விபரம் கோரப்பட்ட நிலையில் அவ்விபரத்தினை இன்னமும் பூர்த்திசெய்து ஒப்பந்தகாரர் வழங்காமையால் தர முடியாது என்றும் குறித்த வீதிக்கு பகிரங்க ஒப்பந்த கோரல் மேற்கொள்ளப்பட்டதா? ஒப்பந்த நிறுவனங்கள் சம்ப்பித்த கோரல்களின் விபரம் ? குறித்த வீதியை புனரமைத்த ஒப்பந்த நிறுவனத்திற்கு குறித்த பணியினை ஒப்படைக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மான விபரம் குறித்த வீதியின் வரைபடம் உள்ளிட்ட விபரங்கள் கோரப்பட்டபோதும் அவற்றினை வழங்க நல்லூர் பிரதேச சபை மறுத்துவிட்டது.

இதவேளை குறித்த வீதிப்பகுதியில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட எந்தவொரு குடும்பவும் வதிவிடத்தைக் கொண்டிருக்காததோடு வலி கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்டு சுமார் 03 குடும்பங்களே வசிக்கின்றபோதும் அது குறித்தான விபரம் கோரியபோது 13 குடும்பங்கள் வசிப்பதாகவும் குறித்த வீதியை பயன்படுத்தும் வகையில் 15 இற்கு குறைவான நபர்களது விவசாய நிலங்களே காணப்படுகின்றபோதும் 23 விவசாயிகளது விவசாய நிலங்கள் காணப்படுவதாகவும் ஆதாரமற்ற தரவுகளை நல்லூர் பிரதேச சபை வழங்கியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com