சற்று முன்
Home / செய்திகள் / வில்பத்து: ‘சட்டவிரோத குடியேற்றத்தை நிரூபித்தால் அரசியலை துறப்பேன்’ – அமைச்சர் ரிசாத் பதியூதீன்

வில்பத்து: ‘சட்டவிரோத குடியேற்றத்தை நிரூபித்தால் அரசியலை துறப்பேன்’ – அமைச்சர் ரிசாத் பதியூதீன்

இலங்கையின் வடமேற்கே உள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தினுள் தன்னால் சட்டவிரோதமான முறையில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அரசியலிலிருந்து விலகிவிடத் தயார் என்று அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
வில்பத்து சரணாலயத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும், அதற்காக காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பௌத்த பிக்குகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
வில்பத்து, சிங்கராஜ மற்றும் யால சரணாலயங்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒன்றியம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பௌத்த அமைப்பான தேசிய சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், வில்பத்து சரணாலய அழிப்புக்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
‘அமைச்சர் ரிசாத் பதியூதீன் மிகப் பெரியளவில் காடுகளை அழித்து வருகிறார் என்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலிருந்தே கூறி வருகிறோம்’ என்றார் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்.
இதனிடையே, இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரிசாத் பதியூதீன், வில்பத்து சரணாலயம் தன்னால் அழிக்கப்பட்டு வருவதாக தன் மீது தொடர்ந்தும் பொய்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக கூறினார்.
‘வில்பத்து சரணாலயத்திற்குள் ஒரு முஸ்லிம் குடும்பத்தையேனும், நான் சட்டவிரோதமாக குடியேற்றியிருப்பதையோ அல்லது நான் காடழிப்பை மேற்கொண்டிருப்பதையே உறுதிப்படுத்தினால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்” என்றார் ரிசாத் பதியூதீன்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com