சற்று முன்
Home / செய்திகள் / விடுதலைப் புலிகள் பாணியில் ஆலயங்களில் மணி அடிக்க ஆளுநர் அழைப்பு

விடுதலைப் புலிகள் பாணியில் ஆலயங்களில் மணி அடிக்க ஆளுநர் அழைப்பு

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்யுமாறு வடமாகாண ஆளுநர் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீரச்சாவடைந்த போராளிகள், பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளே ஆலயங்களின் மணி ஓசை எழுப்பி நினைவுநாளினை நினைவுகூர்வதை மேற்கொண்டுவந்திருந்தனர்.

ஆனால் சிறிலங்கா இராணுவம் மாவீரர் நாள் உள்ளிட்ட குறித்த நினைவேந்தல் நாட்களில் ஆலயங்களில் மணி ஓசை எழுப்ப தடை விதித்ததோடு அத்தினங்களில் ஆலயங்களில் மணி ஓசை எழுப்பிய பூசகர்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வந்திருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com