சற்று முன்
Home / செய்திகள் / விக்கினேஸ்வரனுக்கு கூடுதல் பொறுப்பு – விவசாய, கல்வி அமைச்சுக்களை தன்வசமாக்கினார்

விக்கினேஸ்வரனுக்கு கூடுதல் பொறுப்பு – விவசாய, கல்வி அமைச்சுக்களை தன்வசமாக்கினார்

வடமாகாண சபையில்  குற்றச்சாட்டிற்குள்ளாகி பதவி விலகிய இரு அமைச்சர்களின் அமைச்கு பதவிகளை வடமாகாண முதலமைச்சர் பொறுப்பேற்றார்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, வட மாகாண அமைச்சர்களான, ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர், தங்களது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று (21) ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து இரு அமைச்சுகளினதும் பதில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

பொன்னுத்துரை ஐங்கரநேசனில் பொறுப்பில் இருந்த விவசாய நீர்ப்பாசன மற்றும் கூட்டுறவு அமைச்சினையும், தம்பிராஜா குருகுலராஜாவின் பொறுப்பில் இருந்த கல்வி கலாசார பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய இரு அமைச்சுக்களினதும் பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், க. சர்வேஸ்வரன் உட்பட வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பிரதிச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com