சற்று முன்
Home / செய்திகள் / “விக்கிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது”

“விக்கிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது”

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது. அவர் எங்களுக்கு ஒரு சவால் அல்லர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘ஹிரு’ தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“வடக்கு மாகாண சபை முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன். இனி அதனை நாங்கள் சரியாகக் கையாள்வோம்” எனவும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com