சற்று முன்
Home / செய்திகள் / வாகீசம் இணைய ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வாகீசம் இணைய ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சுவிஸ் நாட்டியிலிருந்து செயற்படும் தமிழர் நிறுவனமான சுவிஸ் ரென்ட் ஏ கார் (Swiss Rent a Car) நிறுவனத்தின் பணிப்பாளர் முருகுப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் 43 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வாகீசம் இணையத்தின் ஏற்பாட்டில் உடுவில் கோட்ட முன்பள்ளிகளைச் சேர்ந்த 43 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சுன்னாகம் வரியப்புலம் மகாமாரி அம்மன் மண்டபத்தில் இன்று (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் சுன்னாகம் ஜனசக்தி முன்பள்ளி ஆசிரியரும் உடுவில் கோட்ட முன்பள்ளி இணைப்பாளருமான ஜெ.வடிவாம்பிகை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உடுவில் கோட்ட முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.கிருபானந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சுவிஸ் ரென்ட் ஏ கார் நிறுவனம் சார்பில் இணைப்பாளராக துரைராசா சத்தியேந்திரா கலந்துகொண்டார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com