சற்று முன்
Home / செய்திகள் / வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து  – ஒருவர் பலி – ஐவர் படுகாயம்

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து  – ஒருவர் பலி – ஐவர் படுகாயம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்ததோடு இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com