சற்று முன்
Home / செய்திகள் / வவுனியாவில் கோர விபத்து மாணவன் ஒருவன் பலி – இரு மாணவர்கள் கவலைக்கிடம்

வவுனியாவில் கோர விபத்து மாணவன் ஒருவன் பலி – இரு மாணவர்கள் கவலைக்கிடம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன் 11 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொவித்துள்ளனர் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்துடன் மோதியுள்ளது இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 13 பேர் புளிங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த புளியங்குளம் பகுதியை; சேர்ந்த அபிஷேக் 8 வயது மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இ.போ.ச பேருந்து முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இ.போ.ச சாரதியை கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com