சற்று முன்
Home / செய்திகள் / வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.வடக்கின் ஜந்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகரில் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன.
இன்று காலை யாழ்.மாவட்ட செயலக முன்றலிலிருந்து புறப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பேரணியை யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள ஜநாவின் உப அலுவக முன்றலில் முடிவுக்கு கொண்டுவந்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் மூன்று சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்த போதும் எந்தவொரு தீர்வும் கிடைத்திருக்கவில்லையென போராட்டத்திலீடுபட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் சர்வதேசமே தமக்கு நீதியை பெற்றுத்தருமென தெரிவித்தனர்.

தமது கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி மகஜரொன்றை ஜநாவிற்கு அனுப்பி வைக்க ஏதுவாக யாழ்.அலுவலக வதிவிடப்பிரதிநிதிகளிடம் அவர்கள் கையளித்துமிருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களால் ஜந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முந்நூறாவது நாளை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com