சற்று முன்
Home / செய்திகள் / வடமாகாணத்தில் உளநல பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் கடமையில் இல்லை

வடமாகாணத்தில் உளநல பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் கடமையில் இல்லை

வடமாகாணத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் உள நல பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் யாரும் கடமையாற்றவில்லை என குறித்த ஐந்து வலயங்களினதும் தகவல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் உள நல பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் கடமையில் உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்து உள்ளனர்.

வடமராட்சி , தென்மராட்சி , தீவகம் , கிளிநொச்சி மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களிலும் உளநல பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் கடமையில் இல்லை என குறித்த வலயங்களின் தகவல் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் , வலிகாமம் , முல்லைத்தீவு , மன்னார் , மடு , வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய ஏழு கல்வி வலயங்கள் பதில் அனுப்பவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com