சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டை பிடிப்போரை வெளியேற்ற நீதிமன்றில் வழக்கு

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டை பிடிப்போரை வெளியேற்ற நீதிமன்றில் வழக்கு

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக அரச நிலத்தில் வாடி அமைத்து கடல் அட்டை தொழில் புரிபவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடக்கோரி மருதங்கேணிப் பிரதேச செயலாளர் கிளிநொச்சி நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தங்கியிருந்து கடல் அட்டைத் தொழில் புரியும் பிறமாவட்ட மீனவர்கள் அரச நிலத்தில் அத்துமீறி குடியமர்ந்தே குறித்த தொழிலை மேற்பொள்கின்றனர். இவ்வாறு தொழில் புரியும் 8 நிறுவனங்கள் மீது நேற்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த நிறுவனங்களிற்கு எதிராக எதிர் வரும் செவ்வாய்க் கிழமை மேற்படி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதேநேரம் யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பகுதியில் வாடி அமைத்துள்ள 4 நிறுவனங்கள் தொடர்பில் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த பகுதியில் உள்ளூர் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் வெளி மாவட்ட மீனவர்கள் பலர் தங்கி நின்று சட்டத்திற்கு முரணாக தொழில் புரிவதனால் பல பாதிப்புக்கள் நிகழ்வதாக உள்ளூர் மீனவர.கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com