சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சியில் பட்டதாரியிடம் 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோட்ட கிரம சேவகர் !

வடமராட்சியில் பட்டதாரியிடம் 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோட்ட கிரம சேவகர் !

பட்டதாரி நேர்முகத் தேர்வின் சான்றிதழை உறுதி செய்வதற்கு வடமராட்சிப் பகுதியில் 2 ஆயிரம் ரூபா கோரிய கிராம சேவகர் தொடர்பில் விசணம் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பட்டதாரிகளிற்கான நேர்முகத் தேர்வு இடம்பெறும் நிலையில் அதற்கான சான்றிதழ்களை உறுதிப்படுத்துவதற்காக பட்டதாரிகள் கிராம சேவகர்களை நாடிச் செல்கின்றனர். இதற்காக பல கிராம சேவகர்கள் நேரம் , இடம் பார்க்காது சேவையாற்றும் நிலையில் ஒரு சில கிராம சேவகர்களை தேடி அலையும் நிலமையும் உள்ளது.

இதில் வடமராட்சிப் பகுதியில் சான்றிதழை உறுதிப்படுத்தச் சென்ற ஓர் பெண் பட்டதாரியிடம் கிராமசேவகர் 2 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் குறித்த பட்டதாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் குறித்த பிரதேச செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ,

குறித்த கிராம சேவகர் தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இதனால் கிராம சேவகரை அப் பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றதோடு ஆரம்ப விசாரணைகளும் இடம்பெறும். எனப் பதிலளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com