சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு மாகாணசபையைக் கலைக்க சதி !!

வடக்கு மாகாணசபையைக் கலைக்க சதி !!


வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினை, சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தெரிவித்தார்.

நேற்றைய (16) சிறப்பு அமர்வின் முடிவில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர்,
“மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உள்ளது.

இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நிலமை பிரதம செயலாளருக்கு தற்போது இல்லை என்றே கருதுகின்றேன்.

ஏனெனில், இந்த விடயத்தில், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையாக பார்க்கின்ற போது அத்தகைய முழுமையான அமைச்சரவை இல்லை என்றே தெரிகின்றது.

1977ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் 27ஆம் இலக்க பிரிவு 5 ஐ அமுலாக்கம் செய்யப்படும் அச்சம் இருக்கின்றது.

அதாவது மாகாண சபை அரசியலமைப்பில் இருந்து பிறழ்வாக செயற்பட்டால் அதனை நீக்கும் அதிகாரம் உள்ளது.

இது எங்கேயோ ஒர் கை, தெரிந்தோ தெரியாமலோ இச் சபையை இக் கட்டான நிலைக்கு தள்ளி அதனூடாக இச் சபையை கலைக்கின்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பொருத்தமற்றது என்று அவர், ஏற்கனவே கடந்த அமர்வில் கூறியிருந்தார்.

அத்துடன், இன்றைய அமர்வில் புளொட் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்கேற்ற ரெலோ உறுப்பினர்களும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டு அவையில் இருந்து வெளியேறினர்.

தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், சிலர் முதலமைச்சரின் நிலைப்பாட்டைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com