சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ரஷ்ய அதிபர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்கிறாரா? புகைப்படங்களால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்கிறாரா? புகைப்படங்களால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதை நிரூபிக்கும் வகையில் வியப்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களில் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் தவிர்க்க முடியாத ஒருவர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கியதற்கு பிறகு உலகம் முழுவதும் அவரை ஒரு ஹீரோவாக பார்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில், விளாடிமிர் புதின் சாகாவரம் பெற்று 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார் என இணையத்தளங்களில் புரளியை பரபரப்பி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த 1920ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் விளாடிமிர் புதினை பிரதிபலிக்கும் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. இது உண்மையில் விளாடிமிர் புதின் என்றால், புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த ஆண்டில் அவருக்கு 20 வயது இருந்திருக்கும் என்றும், தற்போது 2015ம் ஆண்டில் அவருக்கு 115 வயது நிறைவடைந்திருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதே புகைப்படத்தில் 1941 மற்றும் 2015ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களிலும் விளாடிமிர் புதினின் தோற்றம் மாறாமல் இளமையாகவே காட்சி அளிப்பது போல் காணப்படுவதாக சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விளாமிடிர் புதினின் இந்த இளமை தோற்றத்திற்கு அவர் தினமும் தவறாமல் நீச்சல், குதிரையேற்றம் என பலவகையான உடல்பயிற்சிகளில் ஈடுப்படுவதால் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த கருத்துக்களை ஆய்வு வல்லுனர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். தற்போது 63 வயதாகும் புதினிற்கு சாகாதவரம் என எதுவும் கிடையாது. புதினிற்கும் வயதாகி வருகிறது என இணையத்தள புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com