சற்று முன்
Home / செய்திகள் / ரயிலில் பாய்ந்து ஒருவர் பலி – மன்னாரில் சம்பவம்

ரயிலில் பாய்ந்து ஒருவர் பலி – மன்னாரில் சம்பவம்

மன்னம்பிட்டி ஆச்சிபோக்குவ பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவனபிட்டி பகுதியில் புகையிரத கடவை பாதுகாவலராக கடமையாற்றிய 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது தொழிலை இழந்த நிலையில் சில வருடங்கள் மனஉளைச்சலில் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com