சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !!

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !!

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்  கட்டுப்பணம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com