சற்று முன்
Home / செய்திகள் / யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வுக்கு 9 இலட்ச ரூபாய் செலவு

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வுக்கு 9 இலட்ச ரூபாய் செலவு

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு ஒன்றுக்கு 9 இலட்ச ரூபாய் செலவிடப்படுவதாக அறியதரப்பட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக மாநகர சபையின் அமர்வு ஒன்றுக்கான செலவு விபரம் கேட்கப்பட்ட போதே 8 இலட்சத்து 97ஆயிரத்து 180 ரூபாய் செலவிடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநகர முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாயும் துணை முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாயும் 41 உறுப்பினர்களுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாயாக 8 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அதேவேளை மாநகர சபை உறுப்பினர்களான ஜெகன் என அழைக்கப்படும் கே.வி.குகேந்திரன் மற்றும் வி.மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் நீதிமன்றினால் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளமையால் அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,

அத்துடன் சபை அமர்வில் கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி செலவு 2ஆயிரத்து 100 ரூபாயும் , தேநீர் செலவு 1000 ரூபாயும் , மதிய உணவுக்கான செலவாக 18ஆயிரம் ரூபாயும், குடிநீர் போத்தலுக்கான செலவாக 1080 ரூபாயும் செலவளிக்கபடுகின்றது.

இவ்வாறாக சபை அமர்வுக்காக 8 இலட்சத்து 97ஆயிரத்து 180 ரூபாய் செலவிட படுகிறது.

அதேவேளை கடந்த ஆட்சி காலத்தின் போது சபை அமர்வு ஒன்றுக்காக 1 இலட்சத்து 72ஆயிரம் ரூபாய் மாத்திரமே செலவாகியுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தின் போது உறுப்பினர்களுக்கான கொடுபனவுகள் குறைவு எனவும் , அத்துடன் உறுபினர்களின் தொகையும் குறைவு எனவும் அதனாலயே அக்காலத்தில் செலவு குறைவாக காணப்பட்டதாக காரணம் சொல்லப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com