சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாநகரசபையில் ஆளணி நியமனத்தில் முறைகேடு ? – 152 தற்காலிக, 35 மேலதிக நிரந்த நியமனங்கள் !!

யாழ் மாநகரசபையில் ஆளணி நியமனத்தில் முறைகேடு ? – 152 தற்காலிக, 35 மேலதிக நிரந்த நியமனங்கள் !!

யாழ்ப்பாணம் மாநகரசபையில் நிரந்தர ஆளணியினருக்கு மேதிகமாக பணியாற்றுவதற்கு என தற்காலிக பணியாளர்கள் என்ற கோட்டாவின் அடிப்படையில் 152 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளமை மற்றும் நிரந்தர ஆளணி கோட்டாவினை மீறி குறிப்பிட்ட சில வேலைப்பகுதிகளில் மேலதிகமாக 35 பணியாளருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் சட்டம் ஊடாக குறித்த விபரங்கள் யாழ்ப்பாணம் மாநகரசபையிடமிந்து பெறப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் பணிக்கென 1238 ஆளணியினருக்கே நிரந்தர நியமனம் வழங்க முடியும் என்ற நிலையில் கடந்த மற்றும் தற்போதய ஆட்சியாளர்களினால் சில வேலைப்பகுதிகளில் 35 மேலதிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏனைய சில வேலைப்பகுதிகளில் ஆளணி வெற்றிடம் உள்ளபோதும் அவை நிரப்பப்பட முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வகையில் பொறியியலாளர் 01, ஆயுர்வேத வைத்திய அதிகாரி 01, அபிவிருத்தி உத்தியோகத்தர் 01, பெண் சுகாதாரப் பணியாளர்கள் 17, களப் பணியாளர்கள் 15 பேர் மேலதிக நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைவிட தற்காலிக பணியார்களாக 152 பணியாளர்களுக்கு யாழ் மாநகரசபையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் இல்லை என்றும் யாழ் மாநகரசபை தகவல் வழங்கியுள்ளது.

எனினும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் மேலதிக பணியாளர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? மேலதிக பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டிய தேவை என்ன ? என்பன உள்ளிட்டவை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக கோரப்பட்டபோதும் அவை தொடர்பான விபரங்களை வழங்க யாழ் மாநகரசபை மறுத்துவிட்டது.

இது யாழ் மாநகரசபையில் முறையற்ற அரசியல் நியமனங்கள் வழங்கப்படுகின்றதோ என்ற சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் சில நியமனங்கள் வழங்கப்பட்டபோதும் யாழ் மாநகரசபையில் கடந்த ஆண்டுக்கான இலஞ்ச ஊழல் கண்காணிப்புக்குப் பொறுப்பான மாநகரசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியநிலையில் அந் நியமனங்கள் யாழ் மாநகர முதல்வரால் இடைநிறுத்தப்பட்டதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com