சற்று முன்
Home / செய்திகள் / யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி புதுப்பொலிவுடன் புனர்நிர்மாணம்

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி புதுப்பொலிவுடன் புனர்நிர்மாணம்

2017ம் ஆண்டிற்கான    தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் எதிர்வரும்  டிசம்பர் 23ம் நாள் இடம்பெற உள்ள  நிலையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு  ஆரம்பமாகும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் கடும் மழைக்கும் மத்தியில்  நிறைவுறும் நிலையில் உள்ளன.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால்  அமைச்சர்  எம் எச் எம் ஹலீம் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 மேலும் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு யாழ் மாநகரசபை ஊடாக முழு முஸ்லிம் பிரதேசங்களினதும் வீதி மின்விளக்கு வீதி வடிகான்கள் மறுசீரமைப்பு போன்றவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி   மீலாத் விழா அன்று குடிநீர் விநியோகத்தை சிறந்த முறையில் செய்தல் தொடர்பாக யாழ் மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com