சற்று முன்
Home / செய்திகள் / யாழில் 120 நியமனப்பத்திரங்கள் ஏற்பு – 5 நிராகரிப்பு

யாழில் 120 நியமனப்பத்திரங்கள் ஏற்பு – 5 நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 125 நியமனப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 120 நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ந.வேதாநாயகன் தெரிவித்துள்ளார். இதேவேளை 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் வலிமேற்கில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நெடுந்தீவு, வலிவடக்கு பிரதேச சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை, வலிகிழக்கு பிரதேச சபை ஆகிய நான்கு இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெருமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு பகுதியளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் ஒருவரே சமாதான நீதிவானாக வேட்புமனுவை உறுதிப்படுத்தியதையடுத்து கடைசி நிமிடம் வரை வேட்புமனு கேள்விக்குள்ளாகியிருந்தது. இறுதியில் 13வேட்பாளர்கள் நீக்கப்பட்டு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

16 உள்ளுராட்சி சபைகளிற்கு 127 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். அதில் தமிழர்விடுதலைக் கூட்டணி இரு இடங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கவில்லை. கடந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களுடன் சேர்த்து யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 130 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. 137 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தன. அவற்றில் இரு சபைகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. தாக்கல் செய்யப்பட்ட 135 சபைகளில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com