சற்று முன்
Home / செய்திகள் / யாழில் 08 பேருக்கு கொரோனா தொற்று – நேற்று இருவர் பலி

யாழில் 08 பேருக்கு கொரோனா தொற்று – நேற்று இருவர் பலி

குடாநாட்டில் இளைஞர்கள் ஆறு பேர் உட்பட் மேலும் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில்

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 23(ஆண்), 26 (பெண்) , 30(ஆண்), 25(ஆண்) வயதுகளை உடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 25(ஆண்), 49(ஆண்), 62(பெண்), 24(பெண்) வயதுகளை உடையவர்கள்.

இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வீதி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரும் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரும் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 என்றும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com