சற்று முன்
Home / செய்திகள் / யாழில் நகைக்கடைக்குள் புகுந்து தாக்குதல் – ஆசிரியர் சங்க உப தலைவர் படுகாயம்

யாழில் நகைக்கடைக்குள் புகுந்து தாக்குதல் – ஆசிரியர் சங்க உப தலைவர் படுகாயம்

யாழ் பஸ்தியான் சந்தியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் மோதலைத் தடுக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க துணைத் தலைவரான தீபன் திலீசன் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவ்விடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த போதும் அங்கிருந்த போக்குவரத்துப் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்த பின்னடித்து தப்பிச் செல்ல உதவியதால் அங்கு ஒன்று கூடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கும் பொலிசாரிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ,

ஒடர் செய்ததாகக் கூறப்படும் நகை ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு வந்த சிலர் காசு கூடிவிட்டதாக கூறி தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது கடைக்குள் நுழைய முற்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கடை உரிமையாளரை அவரது மனைவியையும் தாக்கிவிட்டு கடையில் இருந்த ஒரு சில நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அவ்வேளையில் சம்பவத்தை அறிந்து நகைக்கடை உரிமையாளரின் மைத்துனரான ஆசிரியர் தீபன் திலீசன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அடாவடியில் ஈடுபட்ட அவர்களை தடுக்க முற்பட்ட போது அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவித்த போதும் அரை மணி நேரத்தின் பின்பே பொலிஸாருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கிடையில் அங்கு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் தாக்குதல் மேற்கொண்ட நபர்களை தடுக்காது தப்பிச்செல்ல விட்டதாக கூறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குறித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடைபெற்ற அரைமணிநேரத்திற்கு பின் வந்த போலீசார் தாக்குதலாளிகள் வந்ததாக கூறப்படும் காரினை கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதோடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் தீபன் திலீசன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com