சற்று முன்
Home / செய்திகள் / யாழில் சிலப்பதிகார விழா

யாழில் சிலப்பதிகார விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

தமிழகத்தில் இருந்து விழாவிற்கென வருகை தந்த 25 பேராசிரியர்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தாரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் வாயிலில் இருந்து நாகதீபன் குழுவினரின் மங்கல இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.

வரவேற்பு ஊர்வலத்தில் இந்தியத் துணைத்தூதுவர், நல்லை ஆதீன முதல்வர் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.

யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிருபாசக்தி கருணா சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் இந்தியத் துணைத்தூதர் சங்கர் பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் வழங்கினர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் சு.நரேந்திரன் சிறப்புரையாற்றினார்.. திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செல்வகணபதி தலைமையில் சிலப்பதிகாரக் காப்பியமும் கதைமாந்தரும் என்ற தலைப்பில் மகளிர் அரங்கு இடம்பெற்றது.

இதில் வசந்தமாலை என்ற பொருளில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எப்.தீபாவும் கவுந்தியடிகள் என்ற பொருளில் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.கற்பகமும் மாதரி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்கினர். இந் நிகழ்வில்

அமர்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Jaseek

One comment

  1. ஒட்டு மொத்தத்தில் ”சிலப்பதிகாரம்” எந்தச் சிந்தாந்தத்தினை வலியுறுத்தும் காப்பியம், அது எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது, அதை இயற்றியதாகக் கூறப்படும் புலவன் வரலாற்று உண்மையா, இல்லையா, ….. என்பவைகள் எதுவும் அறியப்படாது, விழா இனிது நடந்து முடிந்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com