சற்று முன்
Home / செய்திகள் / யாழில் ஒரு கொரோனா நோயாளி!! – சற்று முன் அடையாளம் காணப்பட்டார்

யாழில் ஒரு கொரோனா நோயாளி!! – சற்று முன் அடையாளம் காணப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 45 பேரில் ஒருவருக்கே மேற்படி தொற்று உள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

  • போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 8 பேர்.
  • போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு – 3 பேர்.
  • பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் – 45 பேர்.
  • யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர்.
  • நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.
  • சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்
  • ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com