சற்று முன்
Home / செய்திகள் / யாரை வினைத்திறன் அற்றவர் என்கிறீர்கள் – விக்கி வெளியிட்ட விருதுப் பட்டியல் !!

யாரை வினைத்திறன் அற்றவர் என்கிறீர்கள் – விக்கி வெளியிட்ட விருதுப் பட்டியல் !!

இலங்கை பூராகவுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகளின் நிதிக்கட்டுப்பாடு மற்றும் செயலாற்றுகை பற்றிய மதிப்பீட்டினடிப்படையில் வடக்கு மாகாண சபைக்கு 2015ம் ஆண்டில் ஏழு தங்க விருதுகள் கிடைத்தன. தற்போது 2016ம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் 15 தங்க விருதுகள் கிடைக்கவிருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் விக்கினேஸ்வரனின் ஊடகப்பிரிவு அறிக்கை செயலாற்றுகை பற்றிய மதிப்பீட்டினடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் மோசமான செயற்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு மாகாண சபையினை வினைத்திறனற்றவகையில் முதலமைச்சர் நடத்திவருவதாகவும் முதலமைச்சரின் கீழ் உள்ள திணைக்களங்கள் வினைத்திறனற்று செயலாற்றுலதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரன் உள்ளிட சிலரும் மத்திய அரசில் ஆளுநர் உள்ளிட்டவர்களும் விமர்சித்துவரும் நிலையில் வடக்கு மாகாணசபையின் வினைத்திறனினால் கிடைத்த மற்றும் கிடைக்கவிருக்கும் விருதுகைளை சான்றாதாரமாக்கி முதல்வர் விக்கினேஸ்வரனின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு,

இலங்கை பூராகவுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகளின் நிதிக்கட்டுப்பாடு மற்றும் செயலாற்றுகை பற்றிய மதிப்பீடு -2016

அரசாங்கக் கணக்குகள் குழுவால் இலங்கைத் தீவு முழுவதும் அடங்கலாக ஒன்பது மாகாணசபைகளிலுள்ள மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவின அலகுகள் உள்ளடங்கலாக 260 நிறுவனங்கள் முதன்மை செயலாற்றுகை சுட்டிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட போது 35 நிறுவனங்கள் 93 ற்கு மேற்பட்ட அதியுயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ளன. இதில் வடமாகாண சபையைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது மாகாண சபைக்கு 2015ம் ஆண்டில் ஏழு தங்க விருதுகள் கிடைத்தன. தற்போது 2016ம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் 15 தங்க விருதுகள் கிடைக்கவிருக்கின்றன.
எனவே, எதிர்வரும் ஆண்டுகளில், வடமாகாண சபையின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வினைத்திறனான செயற்பாட்டின் மூலம் எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வினைத்திறனான நிர்வாகத்திற்கும் பங்காற்ற வேண்டுமெனக் கோரி நிற்பதாக கௌரவ முதலமைச்சர் கூறியுள்ளார்.

பின்வரும் அமைச்சு மற்றும் திணைக்களங்களே விருதுகள் பெற்ற 15 நிறுவனங்கள் –
1. பிரதம செயலாளர் செயலகம் 100
2. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி 99
3. முதலமைச்சரின் அமைச்சு – உள்;ராட்சி 99
4. மாகாண தொழிற்துறைத் திணைக்களம் 98
5. மாகாண சுதேச மருத்துவ சேவைகள் திணைக்களம் 98
6. மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள்
திணைக்களம் 97
7. மாகாண இறைவரித் திணைக்களம் 96
8. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல் 96
9. மாகாண விவசாய அமைச்சு 95
10. மாகாண காணி நிர்வாகத் திணைக்களம் 95
11. மாகாண கட்டடங்கள் திணைக்களம் 95
12. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் 95
13. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 94
14. மாகாண சுகாதார அமைச்சு 93
15. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணியும் பயிற்சியும் 93

ஆளுநரின் செயலகம் சம்பந்தமான குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது கவனிக்கப்பாலது –
காசோலைகள், காசுக்கட்டளைகள் கிடைத்தமை சம்பந்தமான பேரேடு காலத்திற்குக் காலம் பேணப்படவில்லை. 2016ம் ஆண்டுக்கான செயலறிக்கை பிரதம செயலாளருக்கு உரிய தினத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவில்லை. பயன்பாட்டுக்குத் தகுதியற்ற வாகனங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக விற்பனைக்கு விடப்படவில்லை. மோட்டார் வாகனங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள், சேதங்கள் பற்றி நட்டங்;கள் சம்பந்தமான பதிவேட்டில் சில சமயங்களில் உள்ளேற்கப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது. மாகாணப் பொது அலுவலர்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளில் காணப்பட்ட மிகுதிப் பணம் ஒரு வருடத்திற்கு மேலாக பாவிக்கப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது. சட்டப்படி வருடாந்தம் கூட்டப்பட வேண்டிய கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் 3 கூட்டங்களும் கூட்டப்படவில்லை.

மற்றும் பல திணைக்களங்களின் குறைகள் பற்றிய அவதானிப்புக்கள் 2016ம் ஆண்டின் பாராளுமன்ற கணக்குகள் குழுவால் வழங்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com