சற்று முன்
Home / பிரதான செய்திகள் / யாரும் பின்கதவால் வரவில்லை – சுமந்திரனும் வரலாம்

யாரும் பின்கதவால் வரவில்லை – சுமந்திரனும் வரலாம்

தமிழ் மக்கள் பேரவைக்கு வந்தவர்கள் எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல. அனைவரும் முன் கதவாலேயை வந்தோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால், அவரையும் நாங்கள் இணைத்துக் கொள்வோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவரிற்கும் முன்கதவு திறந்திருக்கிறது என வடக்கு மகாண முதலமைச்ரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை குறித்து நேற்றையதினம் (26) பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விசமர்சித்திருந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதுதொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்விஎழுப்பியபோதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

மேலும் தெரிவித்த அவர்,

இங்கு வந்தவர்கள் எல்லோரும் எங்கள் கொள்கைகளை ஏற்றவர்கள்தான் வந்திருக்கிறார்கள். சுமந்திரனும் எங்கள் கொள்கைகளோடு உடன்பட்டால் எம்மோடு இணைந்து செயற்பட விரும்பினால் தாராளமாக வரட்டும்.

தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வையும் பெற வாய்ப்புகள் இருப்பதாக உணர்கிறேன்.

வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை எனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவது உண்மை என்றாலும் அதில் தழிழ் மக்களுடைய பிரச்சினைகள் எந்தவகையில் இருக்கின்றது என்பது தான் இன்றைய எமது பேரவையின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

இந்த தழிழ் மக்கள் பேரவையினை விரிவுபடுத்தி மக்களுடைய பலமான ஒரு இயக்கமாக மாற்றவேண்டிய நிலைப்பாடு எமக்கு இருக்கின்றது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com