சற்று முன்
Home / செய்திகள் / மைத்திரி கொலைச்சதி – கைதான இந்தியர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 3 மாதம் தடுத்துவைப்பு

மைத்திரி கொலைச்சதி – கைதான இந்தியர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 3 மாதம் தடுத்துவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியக் குடிமகனை, 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கோட்டே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தப் படுகொலைச் சதித் திட்டம் குறித்து வெளிப்படுத்திய நாமல் குமாரவின் இல்லத்துக்கு அடிக்கடி சென்றார் என்ற குற்றச்சாட்டில் கேரளாவைச் சேர்ந்த மர்சிலி தோமஸ் என்ற இந்தியர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 3 மாதங்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த கோட்டே நீதிவான், எதிர்வரும் 23ஆம் நாள் இந்தியக் குடிமகனை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com