சற்று முன்
Home / செய்திகள் / மைத்திரியின் பாதுகாப்பிற்குச் சென்ற வாகனம் விபத்து – மேஜர் தர அதிகாரி உட்பட இருவர் பலி – நான்கு இராணுவத்தினர் படுகாயம்

மைத்திரியின் பாதுகாப்பிற்குச் சென்ற வாகனம் விபத்து – மேஜர் தர அதிகாரி உட்பட இருவர் பலி – நான்கு இராணுவத்தினர் படுகாயம்

மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் டிபெண்டர் வாகனம்
பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் மேஜர் தர அதிகாரி உட்பட இருவர் பலியானதோடு நான்கு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் குறித்த இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியில் அருகில் நின்ற பனை மரத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 6 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வாகனங்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com