சற்று முன்
Home / செய்திகள் / முள்ளிவாய்க்கால் படுகொலை விபரம் திரட்ட நடவடிக்கை

முள்ளிவாய்க்கால் படுகொலை விபரம் திரட்ட நடவடிக்கை

இலங்­கை­யின் உள்­நாட்டு மோத­லின் இறுதி தரு­ணங்­க­ளில் கொல்­லப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஆரம்­பித்­துள்ள இரு பன்­னாட்டு அரச சார்­பற்ற அமைப்­பு­கள் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன.

பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பும், மனித உரி­மை­கள் தர­வு­கள் ஆய்­வுக்­கு­ழு­வுமே இந்த முயற்­சியை ஆரம்­பித்­துள்­ளன. இலங்­கை­யி­லும், வெளி­நா­டு­க­ளி­லும் உள்­ள­வர்­கள் தங்­க­ளி­ட­முள்ள விவ­ரங்­களை வழங்க வேண்­டும் என்று இரு அமைப்­பு­க­ளும் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன.

ஆகக் குறைந்து இறந்­த­வர்­க­ளின் பெயர்­களை சேக­ரிப்­ப­தன் மூல­மா­வது அவர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்த வேண்­டும் என பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப் அமைப்­பின் நிறை­வேற்று பணிப்­பா­ளர் ஜஸ்­மின் சூக்கா தெரி­வித்­துள்­ளார்.

இறு­திப்­போ­ரில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களை கணக்­கி­டு­வ­தற்கு இந்த எண்­ணிக்கை முக்­கி­ய­மா­னது எனக் குறிப்­பிட்­டுள்ள அவர் நினை­வு­கூ­ரு­வ­தற்­கும் இது அவ­சி­ய­மா­னது என்­றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இலங்­கை­யின் உள் நாட்­டுப் போர் முடி­வ­டைந்து ஒரு தசாப்த காலத்­தின் பின்­ன­ரும் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை என்­ன­வென்­பது எவ­ருக்­கும் தெரி­யாது என குறிப்­பிட்­டுள்ள இரு அமைப்­பு­க­ளும் ஒரு தசாப்­தத்­துக்கு முன்­னர் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் தெரி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது என்­றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் இறுதி எண்­ணிக்­கையை கணிப்­பி­டு­வ­தற்கு புள்ளி விபர அணு­கு­மு­றையை பயன்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் என்­றும், 2009 மே மாதம் 18-19 திக­தி­க­ளில் சர­ண­டைந்த பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கையை மதிப்­பி­டு­வ­தற்கு இந்த முறை பயன்­ப­டுத்­தப்­பட்­டது என­வும் இரு சர்­வ­தேச அமைப்­பு­க­ளும் தெரி­வித்­துள்­ளன.

கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் உண்­மை­யான எண்­ணிக்­கையை உறு­தி­செய்­வ­தற்­காக உல­கம் முழு­து­முள்ள தமி­ழர்­கள் அவர்­க­ளது குடும்­பத்­த­வர்­கள் உற­வி­னர்­கள் அய­ல­வர்­க­ளு­டன் உரை­யாட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் என­ம­னித உரி­மை­கள் தர­வு­கள் ஆய்­வுக்­கு­ழு­வின் தலை­வர் பட்­ரிக் போல் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இலங்­கைக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் உள்ள பல அமைப்­பு­கள் ஏற்­க­னவே இந்த நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­துள்­ளன,என­வும் குறிப்­பிட்­டுள்ள அவர் பெயர்­களை பதிவு செய்­வ­தன் மூலம் ஏற்­க­னவே காணப்­ப­டு­கின்ற தக­வல்­களை பதிவு செய்­ய­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com