சற்று முன்
Home / செய்திகள் / முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஏழு மாவீரர், போராளி குடும்பத்தின் மாணவர்களுக்கு கல்விக்கான மாதாந்த புலமைப் பரிசு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஏழு மாவீரர், போராளி குடும்பத்தின் மாணவர்களுக்கு கல்விக்கான மாதாந்த புலமைப் பரிசு

முள்ளிவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஏழு மாவீரர், போராளி குடும்பத்தின் மாணவர்களுக்கு கல்விக்கான மாதாந்த புலமை பரிசு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார கஷ்டத்துடனும் பெண் தலைமைத்துவ குடும்பமாகவும் வாழும் ஏழு மாவீரர்,போராளி குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்க தலா ஐந்தாயிரம் (5000/=) வீதமும் ஒரு குடும்பத்திற்கு ஏழாயிரமும் (7000/=)இன்னுமோர் குடும்பத்திற்கு மூவாயிரமும்(3000/=) என மாதாந்த வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் பிரபல பாடசாலைகளின் கா.பொ.த உ /த 92ம் ஆண்டு மாணவர்கள் குழுமத்தைச் சார்ந்தவரும் யாழ் பரியோவான் கல்லூரி பழைய மாணவனும் இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத்தமிழரும் சமூக சேவையாளருமான தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் 92ம் ஆண்டு மாணவர்கள் குழுமத்தின் சார்பாக குறித்த புலமைப்பரிசு வழங்கும் செயற்றிட்டத்தை முள்ளிவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு யாழ் எய்ட் ஊடாக ஆரம்பித்து உதவியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com