சற்று முன்
Home / செய்திகள் / முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் அனுஸ்டிக்க அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் அனுஸ்டிக்க அழைப்பு

தமிழ் இனப் படுகொலை வாரமாக மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான ஒருவராத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்க உள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

இவ் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலத்தில் வடகிழக்கு மாகாணத்தின் 21 இடங்களில் நடைபெற உள்ளதாகவும் இறுதி நாளான மே 18 ஆம்திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அந்த

நிறைவேந்தல் நிகழ்விற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை வருடா வருடம் அனுஷ்டித்து வருகிறோம். வடக்கு மாகாண சபையினூடாக செய்யப்பட்டு வந்த இந் நிகழ்வுகளை இம்முறை அப்பகுதி மத்த் தலைவர்கள் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ஆகவே பொதுவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் நிகழ்விற்கு அனைவரும் ஆதரவை வழங்கி ஒற்றுமையாக அணிதிரள வேண்டும். ஆனாலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கும் அந்த நிகழ்வுகளை நடாத்துவதற்கும் பல வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகாலச்சட்ட சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழர்கள் மீது கடுமையாக பிரயோகிக்கப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தக்கூடாது மக்கள் அணிதிரளக் கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மக்களை அச்சமூட்டுகின்ற செயற்பாடுகளும் தொடந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் வருகிறது.

ஆகவே இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் அரசின் அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாமல் தடைகளைத் தாண்டி இந் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாட்களில் தமிழினப் படுகொலை வாரமொன்றை கடைப்பிடித்து வருகின்றோம். இதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தை தமிழினப் படுகொலை வாரமாக கடைப்பிடித்து வட கிழக்கின் பல இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த உள்ளோம்.

இதற்கமைய 12 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இந்த நிகழ்வை ஆரம்பித்து அதன் பின்னர் வடகிழக்கு முழுவதுமாக 21 இடங்களில் நடாத்தி இறுதியாக 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுறுத்த உள்ளோம்.

ஆகவே அரசின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாது இந்த படுகொலை வார நிகழ்வுகளிலும் முள்ளிவாய்க்கால் இறுதி நிறைவேந்தலிலும் அனைத்து உறவுகளும் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com