சற்று முன்
Home / செய்திகள் / முல்லைத்தீவு நில விடுவிப்புத் தொடர்பில் மூன்று மாதங்களாகியும் அறிக்கை தயாரிக்காத அதிகாரிகள்

முல்லைத்தீவு நில விடுவிப்புத் தொடர்பில் மூன்று மாதங்களாகியும் அறிக்கை தயாரிக்காத அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நில விடுவிப்புத் தொடர்பில் மாவட்டத்தில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவு மூன்று மாதங்களாக நடைமுறைப்படுத்தவில்லை. என மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் தற்போதும் 13 ஆயிரத்து 14 ஏக்கர் மட்டுமே உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த ஏப்ரல் 17ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது. குறித்த கணக்கீட்டில் 1150 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தவறான கணக்கீடு என சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களின் சரியான அளவீடு மற்றும் அந்த நிலங்களில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் தொடர்பில் உடன் மாவட்டத்தில் சகல தரப்புக்களும் கூடி ஆராய்ந்து அதன் அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கடந்த 2018-04-17 அன்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை இதற்கான கூட்டத்தை மாவட்ட ரீதியில் கூட்டப்படவில்லை. இதனால் தமது நிலம் விடுவிப்பில் தாமதம் ஏற்படுவதாக மாவட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இவ்வாறு மக்கள் கூறுவது தொடர்பில் அக் கூட்டத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரும் மாவட்டத்தில் இடம்பெறும் ஆராய்வில் அங்கம் வகிக்குமாறு கூறப்பட்டவர்களில் ஒருவருமான வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளரான திருமதி. விஜயலட்சுமி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த ஏற்பாட்டினை மாவட்ட அரச அதிபர் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் இடம்பெறவில்லை. என்றார்.

குறித்த கலந்துரையாடல் இடம்பெறாதமை தொடர்பில் மாவட்டச் செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டபோது . மேற்படி கலந்துரையாடல் மாவட்டத்தில் இடம்பெறவேண்டும் என்றபோதும் இதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளும் பொறுப்பு மீள்குடியேற்ற அமைச்சின் செயராளரிடமே ஒப்படைக்கப்பட்டது. எனப் பதிலளித்தார்.

இவற்றின் அடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவரின் உதவியாளரே பதிலளித்தபோதும் செயலாளர் பதிலளிக்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com