சற்று முன்
Home / செய்திகள் / முல்லைத்தீவில் இனந்தெரியாத காய்ச்சல் – விசேட வைத்தியர்குழு ஆராய்வு

முல்லைத்தீவில் இனந்தெரியாத காய்ச்சல் – விசேட வைத்தியர்குழு ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் இனங்காணப்படாத காய்ச்சல் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் நிபுணர் குழு ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாவட்டத்தில் பரவி வரும் புதுவித காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நால்வர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காய்ச்சல் தொடர்பில் எவ்வித தீர்மானத்துக்கும் வரமுடியாது உள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் சுகாதார அமைச்சிடம் அறிவுறுத்தியமைக்கு அமையவே விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து இது தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com