சற்று முன்
Home / செய்திகள் / முன்னாள் அமைச்சராய் ஹெலியில் வந்த விஜயகலா கோண்டாவிலில் தரையிறங்கினார் !!

முன்னாள் அமைச்சராய் ஹெலியில் வந்த விஜயகலா கோண்டாவிலில் தரையிறங்கினார் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத் தொழில் அமைச்சர் தயா கமகேயும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைகந்த உலங்கு வானூர்த்தி முன்னறிவிப்பின்றி கோண்டாவிலில் தரையிறங்கியதால் மக்கள் மத்தியில் சில மணி நேரம் ஆரவாரம் ஏற்பட்டது

திருநெல்வேலி விவசாயத்திணைக்களத்தில் நடைபெற்ற நாடு முழுவதும் பத்து கோடி ஏற்றுமதி பயிர்களை நாட்டும் செயற்திட்ட நிகழ்வில் பங்கேற்க சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத் தொழில் அமைச்சர் தயா கமகேவும் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உலங்குவானூர்தியில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

வழமையாக உலங்குவானூர்திகள் யாழ் நகரில் தரையிறங்கும் நிலையில் குறித்த உலங்குவானூர்தி கோண்டாவில் டிப்போ மைதானம் எனப்படும் கலைவாணி விளையாட்டரங்கில் தரையிறங்கியது.

அதன்போது அங்கு குழுமிய மக்கள் உலங்கு வானூர்தியுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னரான நிகழ்வு முடித்துவந்த முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் உலங்குவானூர்தியில் கொழும்பு புறப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com