சற்று முன்
Home / செய்திகள் / முன்னணியுடன் முரண்பாடு இல்லை ! – ஆனந்தசங்கரியையும் கைவிடுவதாய் இல்லையாம் – குழப்பத்தில் சுரேஸ் அணி !

முன்னணியுடன் முரண்பாடு இல்லை ! – ஆனந்தசங்கரியையும் கைவிடுவதாய் இல்லையாம் – குழப்பத்தில் சுரேஸ் அணி !

தமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் தாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆனந்தசங்கரியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திக்க பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்ட தேர்தலாகும்’
“உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் காட்டுவதற்கு தமிழரசுக் கட்சி ஆர்வம் காட்டுகிறது. ஆனால் வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும்.
தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்துக் கொண்டுஇ கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.
அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். அந்தவகையில் பலராலும் ஆதரிக்கப்பட்டஇ தந்தை செல்வாவாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம். ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன் அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com