சற்று முன்
Home / செய்திகள் / முதல் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்!!

முதல் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்!!

முதல் பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயக்கண்ணியின் தந்தையான கணபதிப்பிள்ளை துரைசிங்கம் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்கும்பான் மேற்கு 5 ஆம் வட்டாரத்ழதை பிறப்பிடமாக கொண்ட அவர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முட்கொம்பனில் வசித்து வந்த நிலையில் 31.07.2020 வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 10 திகதி பிறந்த துரைசிங்களம் புஸ்பகலா என்னும் அங்கயற்கண்ணி 1994 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 16 ஆம் திகதி அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் கப்பல் மீதும், டோறா விசைப் படகு மீதும் நடத்திய கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com