சற்று முன்
Home / செய்திகள் / மீள எழுச்சிபெறும் மயிலிட்டி துறை

மீள எழுச்சிபெறும் மயிலிட்டி துறை

வலி வடக்கு மயிலிட்டித் துறையில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் பிடிபடும் மீன்களை அவ்விடங்களில் வைத்தே விற்பனை செய்து வருகின்றனர்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் அதிகமான மீனவக் குடும்பங்கள் தமது ஜீவனோபாயத் தொழிலை விருப்புடன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மீன்களை பிடித்து வெளி இடங்களில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் பிடிக்கப்படுகின்ற இடங்களிலே வைத்து கொள்வனவு செய்ய வருகின்ற அயலூர் தொழிலாளர்களுக்கும் மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்கள்,

நாங்கள் எங்களது சொந்த கடலில் இப்போது தொழில்செய்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது. இங்கு அதிகளவு மீன்கள் பிடிபடுகிறது. மலியிட்டி மீளவும் பழைய மயிலிட்டியாக மீள எழுச்சிபெறும் என்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com