சற்று முன்
Home / செய்திகள் / மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை – சித்தார்த்தன்

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை – சித்தார்த்தன்

சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினர் 2012ஆம் ஆண்டே கட்சியைவிட்டு விலகிய நபர் என புளொட் அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் புளொட் அமைப்பிலிருந்த சகல ஆயுதங்களையும் ஒப்படைக்குமாறு அறிவித்திருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பில் தமது அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருந்ததாக முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறித்து வினவியபோதே புளொட் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

‘20.11-.2012ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலுடன் குறித்த நபர் எமது கட்சியி லிருந்து விலகி விட்டார். முன்னர் அந்த இடத்தில் எமது அலுவலகம் இயங்கிவந்தது. ஆனால், குறித்த நபர் அந்த இடத்திலிருந்து வெளியேறாது பலவந்தமாகத் தங்கியிருந்தார். இது தொடர்பில் அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கும் அறிவித்திருந்தேன்’என்றார். யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல முகாம்களிலிருந்த ஆயுதங்களை மீளக் கையளிக்குமாறு தான் அறிவித்திருந்ததாகவும், சகல ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டதாக நம்பியிருந்த நிலையில், மீட்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதங்கள் குறித்து பொலிஸார் இன்னமும் தமக்கு அறிவிக்கவில்லையெனத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டவையா என்பது விசாரிக்கப்பட வேண்டியிருப் பதாகவும் குறிப்பிட்டார். குறித்த கட்டடத்திலிருந்து அவரை வெ ளியேற்றுவதற்காக கட்டட உரிமையாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com