சற்று முன்
Home / செய்திகள் / மாவை, சரவணபவன் ஆகியோரின் நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவு பெறப்பட்டது என்கிறது பொலிஸ்

மாவை, சரவணபவன் ஆகியோரின் நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவு பெறப்பட்டது என்கிறது பொலிஸ்

யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லத்தில் நாளை திங்கட்கிழமை நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் நிகழ்வு இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அத்தோடு உதயன் பத்திரிகை நிறுவனத்தில் அதன் இயக்குனர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் நிகழ்வு நடத்தப்படவிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெரிவில் அவர் வசிக்கும் இல்லத்தில் நிகழ்வு நடத்தப்படவிருந்தது.

இந்த நிகழ்வுகள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த நிலையில் அவற்றைத் தடை செய்ய நீதிமன்றக் கட்டளை பெறப்பட்டுள்ளது. மீறி நிகழ்வு இடம்பெற்ற அதில் பங்கேற்கும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com